/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambulance-siren-ni_1.jpg)
சென்னையை அடுத்த மணலி பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி நேற்று காலை (11-01-24) மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பேசின் பிரிட்ஜ் பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்றுகொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லேசான காயங்களுடன் தன்வாய்ப்பாகஉயிர்த்தப்பினர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் தனது மோட்டார் சைக்கிளுடன் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து, பேருந்தை பின்புறமாகத்தள்ளி, சிக்கிய நபரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வராததால், போலீசார் எந்தவித நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது வழக்கு இல்லையா? என இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)