
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து,கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாகசிகிச்சை பெற்றுவந்தநிலையில், கடந்தஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா,பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் எனதெரிவித்திருந்த நிலையில், பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை9 மணிக்குத் தமிழகம் வருவார் எனநேற்று (04.02.2021) டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகம் வரும் சசிகலா, சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டம் அருகே கொடியேற்றத் தடை கோரிஉயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக சார்பில்சசிகலாகொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சசிகலா கொடியேற்றுவதற்கான கம்பம்நடுவதற்கும், பேனர்கள்வைப்பதற்கும்தடை விதிக்க கோரிஎம்ஜிஆரின் வளர்ப்பு மகள்கள்உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)