Skip to main content

செப்.24 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
செப்.24 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

செப்டம்பர் 24ஆம் தேதி முதல் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகை விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் வாக்கு உறுதியை ஏற்று தங்களின் போராட்டத்தை விலக்கி கொள்வதாக போக்குவரத்து துறை ஊழியர்கள் அறிவித்தனர். 

இதனையடுத்து நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்