Skip to main content

கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு 13 ஆயிரம் பேர் பங்கேற்பு

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு 13 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவையில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்ப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் ஆதரவோடு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், சிறைத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தனது குழுவினருடன் கலந்து கொண்டார். மேலும் பெண்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், மாற்று திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர் என சுமார் 13,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது போன்ற மாரத்தான் போட்டிகள் தங்களுக்கு மன வலிமையும், உடல் வலிமையையும் அளிப்பதாக போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இந்த போட்டியின்போது, காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் அதிவேக விரைவு படையை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்