/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_92.jpg)
ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்து மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜு இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் ஏற்கெனவே வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. ஜூன் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து, மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் கதாநாயாகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் பாகத்தின் போதே நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகத்தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)