Rain in 18 districts in next 3 hours

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வானிலை மையத்தின்அறிவிப்பின்படி பெரம்பலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் லேசானமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுக்கோட்டை,மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, குமரி, நீலகிரி, இராமநாதபுரம், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பொழிவு காரணமாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் சைரன் ஒலி எழுப்பி வெளியேற்றப்பட்டனர். திருச்சியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் எடமலைப்பட்டி புதூரில் மின்னல் தாக்கி வீடு இடிந்தது. இதில் செல்லையா என்ற 75 வயது முதியவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.