Skip to main content

வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், ஜீவ சமாதி அடையும் நோக்கில் கடந்த 18ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மற்றும் மவுன விரதத்தை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி நளினி, முருகன் உண்ணாவிரதத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 28ம் தேதி முதல் தானும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி இருந்தார். 

அதன்படி, நேற்று காலை மற்றும் மதிய உணவை நளினி தவிர்த்துள்ளார். மேலும் டீ, காபி போன்ற எதையும் சாப்பிடாமல் தனது அறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தகவல் அறிந்த சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், தனது கணவரின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி நளினி உண்ணாவிரதம் இருக்க போவதாக வாய்மொழியாக தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் முறையான கடிதம் அளிக்கவில்லை என்றனர்.

சார்ந்த செய்திகள்