bribe

Advertisment

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜீன் 20ந்தேதி மாலை 5 மணியளவில் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் 50 ஆயிரம் இருந்துள்ளது. இது தொடர்பாக சார் பதிவாளர்கள் சம்பத், பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், போளுர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்திவருகின்றனர். அங்கும் கணக்கில் வராமல் சில ஆயிரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பத்திர எழுத்தர் ஒருவரையும் அலுவலகத்துக்குள் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் போளுர் பகுதி பரபரப்பாக உள்ளது.