Published on 02/04/2021 | Edited on 02/04/2021

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் வேளையில், சில வேட்பாளர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், தமிழகத்தை நோக்கி வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீசுவதால், அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் வேண்கோள் விடுத்திருந்தது. கரோனா ஒருபுறம் பயம் காட்டி வரும் நிலையில் தற்போது வெயிலும் கடுமை காட்ட தொடங்கியுள்ளது.