
நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகர் சங்க தலைவருமான விஷால் நடிகை சாய் தன்சிகாவை காதலித்து கரம் பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள 'யோகி டா' திரைப்பட விழாவில் விஷால்- சாய் தன்ஷிகாவின் திருமண செய்தியை இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.வி.உதயகுமார் பேசுகையில் 'தன்ஷிகாவும் விஷாலும் காதல் வயப்பட்டு இருக்கிறார்கள். சரி எப்ப நடிகர் சங்கத்தை திறந்து வைத்துவிட்டா கல்யாணம். என்ன கண்ணு.. வெட்கத்தை பாருடா... எனக்கு விஷாலை பிடிக்கும் ரொம்ப. மனதில் எதையும் வச்சுக்காம மனச திறந்து மனசுல என்ன தோணுதோ பட்டென பேசுகின்ற கேரக்டர். அவர் நடிகராக இருப்பதற்கு முன்னாடி இருந்தே தெரியும்'' என்றார்.
இந்த நிகழ்வில் விஷாலும் கலந்து கொண்டார். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு திருமணம் செய்வேன் என விஷால் தெரிவித்திருந்த நிலையில் அவர் சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது. சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி நடிகர் விஷால்-சாய் தன்ஷிகா திருமண நடைபெறும் என இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'இறுதிவரை விஷாலை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன்' என நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார்.