Published on 03/08/2021 | Edited on 03/08/2021

தாம்பரத்தில் தொடர்ச்சியாக கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணையில் உள்ள கோவில் உண்டியலில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த திருடனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர். கோவில் உண்டியலில் காப்பர் கம்பிகளில் சுவிங்கம் ஒட்டி உண்டியலில் இருக்கும் பணத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினமும் அந்த கோவிலுக்கு வந்த அதே கொள்ளையன் அதே முறையில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பணத்தை எடுத்துச் செல்லும் கொள்ளையனைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.