Skip to main content

தமிழகத்தை சேர்ந்தவருக்கு 'கொரோனா...' சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை!! 

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

இந்தியாவில் கொரோனா வைரஸால்  மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 31 ஆக இருந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

 

 Coroner of the Tamil Nadu ... treated at Rajiv Gandhi Gandhi Hospital in Chennai


இந்நிலையில் ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேர் உடல்நிலையும் தற்பொழுது வரை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா உறுதியானதை அடுத்து ஓமனில் இருந்து இந்தியா வந்த 45 வயதுடைய அந்த நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம். கோரோனோ பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். கொரோனவை  தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத் துறை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்