Allowed to remand for two days

Advertisment

காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தேனியில் கடந்த 4ஆம் தேதி தனியார் விடுதியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் பயன்படுத்திய காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி அவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சவுக்கு சங்கரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் மனுதாக்கல் செய்த நிலையில் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரையில் இருந்து தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு பெண் போலீசார் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை அழைத்து வந்தனர்.

தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணையை துவக்க உள்ளனர். இந்த விசாரணையின் போது சவுக்கு சங்கர் வக்கீல் ஒரு நாளைக்கு மூன்று முறை சவுக்கு சங்கர் பார்த்து போலீசார் ஏதும் துன்புறுத்தி இருக்கிறார்களா என்று விசாரித்துக் கொள்ளலாம் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.