Skip to main content

ஜெ. சமாதிக்கு போனவர்கள் பவர் இழந்தார்கள்.. திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
gh

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலத்தில் திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி சமஉ மெய்யநாதன், மா செ பொருப்பு திருமயம் சமஉ ரகுபதி பங்கேற்றனர். சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார். 

 

அவர் பேசும் போது.. இன்றைய அதிமுக ஆட்சி மோடியின் கைப்பாவையாக தான் நடக்கிறது. மோடி சொல்வதை தான் எடப்பாடி செய்து வருகிறார். அமைச்சர்களும் அதிமேதாவிகளாக உள்ளார்கள். இந்த மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முழு உடல் பிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.. முதல்ல அந்த அம்மா உடலையே முழுமையா பரிசோதனை செய்யமுடியாதவர்கள் முழு உடல் பரிசோதனை திட்டம் அறிவித்திருப்பது வியப்பாகாக உள்ளது. 


ஒவ்வொரு அமைச்சரும் ஒரு வழியில் செல்கிறார்கள். ஜெ சமாதிக்கு போன ஒ பன்னீர்செல்வம்  முதல்வர் பதவியை இழந்தார். அடுத்து போன சசிகலா சிறைக்கு போ்விட்டார் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அங்கே போனார் நிதி அமைச்சர் போச்சு.. எடப்பாடி போனார் ஆட்சி ஊசலாடுகிறது. 
இப்படி யார் ஜெ சமாதிக்கு போனாும் தங்கள் பவரை இழந்துவிட்டார்கள்.   தூத்துக்குடி சம்பவத்தில் போராடியவர்களை 13 பேரை சுட்டுக் கொன்ற பெருமை எடப்பாடியயே சேரும்.தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள்விரோத அரசு தான் நடக்கிறது இந்த ஆட்சிக்கு நேரம் எணணப்படுகிறது  என்றார்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஜெ - ஜா அணிகளை இணைத்ததே நான்தான்...” - சசிகலா நம்பிக்கை 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Sasikala has said that she will re-merge AIADMK

 

ஜெயலலிதா அணியையும் ஜானகியையும் இணைத்ததே நான்தான். எனக்கு இது ஒன்றும் கஷ்டமில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். 

 

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில்  இந்தியாவிற்கு பெருமை என நினைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் இருக்கிறது என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக திறப்பு விழாவில் பங்கேற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். ஒரு கட்சி அல்லது ஒரு இயக்கம் என்று இருந்தால் அது தொண்டர்கள் விருப்பம்தான் வெற்றி பெறும். அதன் அடிப்படையில் பார்த்தால் தொண்டர்கள் விருப்பம் என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். 

 

ஏற்கனவே வெளிநாடு பயணம் சென்ற தமிழ்நாடு முதல்வர் என்ன கொண்டு வந்தார். தற்பொழுது இரண்டாவது முறை வெளிநாடு பயணம் சென்று என்ன கொண்டு வரப் போகிறார். தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளை  திமுக அரசு தக்க வைத்துக் கொண்டதாக எனக்கு தெரியவில்லை. தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் திமுக ஆட்சி வந்த பின்னர் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மின்சாரம் போதுமானதாக இல்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர தயக்கம் காட்டுகிறது. இதை மறைப்பதற்காக முதல்வர் வெளிநாடு சென்றிருப்பதாக நான் கருதுகிறேன்” என்றார். 

 

தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் உங்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளாரா? அல்லது அதிமுக மூன்று அணியாக செயல்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்லோரையும் ஒன்றாக இணைத்து செல்ல வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். எம்ஜிஆர் இறந்தவுடன் ஜானகி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது அதை ஒன்றாக இணைத்தேன்.  இப்பொழுதும் இதை நான் கஷ்டமாக நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை நான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறேன்” என்றார். மேலும், தமிழ்நாட்டில் 25 சதவீதம் மட்டுமே அனுமதி பெற்ற பார் இயங்குகிறது. துணிக்கடை போல் மீதமுள்ள பார்கள் அனுமதி இன்றி இயங்கி வருகிறது. அனுமதி இன்றி பார்கள் இயங்குவது தமிழ்நாடு முதல்வருக்கு தெரியாதா? அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரியாதா?

 

தமிழ்நாட்டு மக்களை அதிமுகவால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதை எப்படி செய்ய வேண்டும் என எனக்கு தெரியும். இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டை திமுக கையில் ஒப்படைக்க விடமாட்டோம். உண்மையான அதிமுக நாங்கள் தான். வரும் தேர்தலுக்குள் நாங்கள் எல்லாம் நிச்சயம் ஒன்று சேருவோம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எப்படி சிறப்பாக ஆட்சி செய்தார்களோ அதுபோல் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்வோம்” எனவும் தெரிவித்தார். 

 

 

Next Story

திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு

Published on 07/04/2019 | Edited on 07/04/2019
police case

 

திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முதல்வரை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.