Skip to main content

ஊட்டியில் பயணிகள் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017

ஊட்டியில் பயணிகள் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல்

நீலகிரி மாவட்டத்தில் 2ம் சீசன் துவங்கியுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகை, வார விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறை என தொடர் விடுமுறையால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 10 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதலே ஊட்டியில் கேரள சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை, பூங்கா சாலை, ஊட்டி-கூடலூர் சாலையில் பைக்காரா பகுதியில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்