ஓட்டுனர் உரிமத்திற்கான டிஜிலாக்கர் முறைக்கு அரசு உத்தரவிட வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனவே, வாகன ஓட்டுனர், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்காமல் டிஜிலாக்கர் மூலம் அசல் ஓட்டுனர் உரிமத்திற்கான ஆவணப்பதிவை காட்டும் போது போக்குவரத்து காவல்துறை அதனை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும் தமிழக போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டுனர்களிடம் அசல் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்களை பரிசோதிக்கும் போது அவர்கள் கூறும் காரணம் சரியாக இருந்தால், விதி மீறல்களில் ஈடுபடாமல் ஓட்டி வந்திருந்தால் அவர்கள் மீது தேவையற்ற அபராதமோ அல்லது கடுமையான நடவடிக்கையோ எடுக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.