Skip to main content

2-ஆம் நாளாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 13/10/2020 | Edited on 14/10/2020
 Corona below 5,000 for the second day - Today's corona situation in Tamil Nadu!

 

தமிழகத்தில் கடந்த 42 நாட்களுக்கு பிறகு  நேற்று  5 ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகி இருந்த நிலையில் இன்றும்  5 ஆயிரத்திற்கு குறைவாக  4,666 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,65,930   ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 43,239  பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,164 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 20 -வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,84,429 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 83,803 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இன்று மேலும் 5,175 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,12,320 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 57 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,371 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3,441 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.அதேபோல் இன்று அதிகபட்சமாக கோவையில் 398 பேருக்கும், சேலத்தில் 277 பெருக்கும் ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்