
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2, மிஷ்கினின் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் அவரது 50வது படமான மகராஜா, ஆறுமுகக் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகிறது. இயக்குநர் ஆறுமுகக்குமாரே இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிருத்வீராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஏஸ், (Ace) என தலைப்பு வைத்துள்ளனர். டீசரை பார்க்கையில் சூதாட்டத்தை மையபடுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.