Class 10 student passed away suddenly

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஒரிசேரி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (16). அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் கவுதம் சம்பவத்தன்று பால் குடித்துள்ளார். அதன் பின்னர் கவுதம் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து சிகிச்சைக்காக கவுதமை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கவுதம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Advertisment

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் கவுதம் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கவுதம் பிரேத பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அதில் அவர் எவ்வாறு இறந்தார் என்று தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர். 10 ஆம் வகுப்பு மாணவனின் திடீர் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.