Skip to main content

செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகல்; நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

nn

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜரானார்.

 

ஏற்கனவே சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. மறுபுறம் ஜாமீன் பெற செந்தில் பாலாஜி தரப்பு முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்த வழக்கு நேரடியாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி இன்று ஆஜரான அவரிடம் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட 3,000 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய நீதிமன்றம், இன்றுடன் முடிய இருந்த அவருக்கான நீதிமன்றக் காவலை செப்.15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்