Skip to main content

போலீஸ்காரர் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: மக்கள் போராட்டம்!

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
போலீஸ்காரர் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: மக்கள் போராட்டம்!

கடலூர் அருகே திருமாணிகுழியை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் நேற்று இரவு கெடிலம் ஆற்றில் மணல் அள்ளி கொண்டு மாட்டு வண்டி ஓட்டி வந்துதுள்ளார். அவரை வழிமறித்த நடுவீரப்பட்டு போலீசார் லஞ்சம் கேட்டு தாக்கியுள்ளனர். போலீஸ்காரர் ஒருவர் ஹெல்மெட் கொண்டு தாக்கியதில் சக்கரபாணி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருமாணிக்குழியில் இறந்து போன தொழிலாளியின் உடலை வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அடித்து கொலை செய்த போலீஸ்காரர் மீதும், மாமுல் வசூல் செய்ய உத்தரவிடுகிற பண்ருட்டி டி.எஸ்.பி சுந்தரவடிவேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.

5 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது அரசு வேலை வழங்க‌வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர். இதனால் அங்கு சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.

இது சம்பந்தமாக தாசில்தார் வந்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் சக்கரபாணியின் சடலத்தை எடுத்து சென்றனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்