young men stole from the old lady for the leg shaver jewelry

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது பெரிய காட்டு பாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி லட்சுமி. இவரது கணவர் சாரங்கபாணி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டர். இவர் தனதுபிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி லட்சுமி கடந்த 24ஆம் தேதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவரது உறவினர்கள் வயதான காலத்தில் லட்சுமி தூக்கத்தில் இரவில் எழுந்த போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து விட்டதாககருதியுள்ளனர். இருந்தும் மூதாட்டியின் மகள் இந்திராணி தனது தயார் லட்சுமி இறப்பில் சந்தேகம் இருப்பதாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் நேற்று போலீசார் அந்தப் பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் இருவரும் அதே பெரிய காட்டு பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த 20 வயது கிருஷ்ணகுமார், கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது ஐயப்பன் என்பதும் தெரியவந்துள்ளது. போதையில் இருந்த இருவரிடமும் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியதில், இருவரும் கடந்த 23 ஆம் தேதி இரவு தனியாக வசித்து வந்த மூதாட்டி லட்சுமி வீட்டில் திருடதிட்டமிட்டு சென்றுள்ளனர். வீட்டில் பெரிய அளவுக்கு திருடுவதற்கு விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் மூதாட்டி அணிந்திருந்த 2 கிராம் தங்த்தோடின் மீதுகவனம் செலுத்தியுள்ளனர். ஆனால் மூதாட்டியிடம் திருடும் போது அவர் கத்தி கூச்சலிடுவார் என்று எண்ணி மூதாட்டின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு லட்சுமி காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்கத்தோட்டை கழட்டி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மூதாட்டி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கடலூர் சிறையில்அடைத்துள்ளனர்.

Advertisment