Skip to main content

கேக் வெட்டி கொண்டாடிய ஜெயம் ரவி படக்குழு  

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
jayam ravi kiruthika udhayanidhi kadhalika neramillai shoot wrapped up

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்ததாக படக்குழு தரப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஜெயம் ரவி, படத்தில் பணியாற்றியது அருமையாக இருந்ததாக கூறி படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். இப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படம்; அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
jayam ravi brother movie update release

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்.எம், தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். தற்போது அவர், ஜெயம் ரவியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்க மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரதர் (Brother)’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில், பூமிகா, விடிவி கணேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தின் பாடலை ‘திங் மியூசிக்’ ஆடியோ உரிமையை வாங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், திருமண வரவேற்பில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சேர்ந்து பாடலை பாடி கொண்டாடி வருவது போல் இடம்பெற்றியிருந்தது. சில நொடிகளில் மட்டுமே வரும் அந்தப் பாடலில் ஹம்மிங் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று முனுமுனுக்க செய்தது.

இந்த நிலையில், படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ‘ஜீ தமிழ்’ நிறுவனம் வாங்கியிருப்பதாக ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் வரும் காட்சிகள் மூலம், இயக்குநர் ராஜேஷ்.எம் மீண்டும் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

ஏ.ஆர் ரகுமானின் குரலில் வெளியான ஜெயம் ரவி பட கிளிம்ப்ஸ்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
jayam ravi nithya menon kadhalikka neramillai glimpse released

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. போஸ்டரில் ஜெயம் ரவியும், நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்ததாக படக்குழு தரப்பு தெரிவித்தது. 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் குரலில், ஒரு பாடலுடன் இந்த வீடியோ அமைந்திருக்கிறது. மேலும் இசை உரிமத்தை டி-சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.