Skip to main content

திருவாரூரில் மணமக்களுக்கு தண்ணீர் கேன் வழங்கிய கம்யூனிஸ்ட் தோழர்கள்!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

தமிழகத்தை தண்ணீர் பஞ்சம்  புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் வேலையில் கம்யூனிஸ் கட்சியினர் திருமண நிகழ்வில் மணமக்களுக்கு குடிநீர் கேனை பரிசாக வழங்கியது பலரையும் பேசவைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் பருவமழையின் அளவு சராசரியைவிட பலமடங்கு குறைந்து பெய்தது. அதோடு பெய்த மழை நீரையும் சேகரிக்க தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் கலக்கசெய்ததால் தற்போது தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் தள்ளாடி வருகிறது.

Communist comrades provided the water cans to  couples in Thiruvarur!


தண்ணீர் பஞ்சத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பிழைப்புத்தேடி சென்றவர்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கே திரும்பும் நிலை ஏற்பட்டுவிட்டது. பலர் தாங்கள் குடியிருந்த வீடுகளை காலி செய்யும் நிலையும் ஏற்பட்டுவிட்டது. தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டதாலும், சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் மக்கள் வேலையிழந்து வீடுதிரும்புகின்றனர். ஓட்டல்களுக்கு தண்ணீர் இல்லாமல் பல ஓட்டல்கள் மூடிவிட்டனர். பல குடியிருப்புகளில் உணவு சமைக்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக நாள் கணக்கில் செலவழிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதை மாநில அரசு கண்டும் காணாமலும் இருந்து வருகிறது. குடிநீருக்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றும் அரசு செவிசாய்த்த பாடில்லை. இந்த நிலையில் இதனை அரசுக்கு உணர்த்தும் வகையில் நேற்று திருவாரூர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் திருஞானம் இல்லத் திருமண விழாவில் மணமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். சார்பில் குடிநீர் கேன்களை பரிசாக வழங்கினார்.

இதுகுறித்து ஐ,வி, நாகரஜான் கூறுகையில்," மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை தமிழக அரசு கண்டும் காணாமல் இருந்துவருகிறது. இதற்காக மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை தமிழக அரசுக்கு உணர்த்தும் வகையில் மணமக்களுக்கு குடிநீர் கேனை வழங்கினோம்," என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.