கோவை மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மேட்டுப்பாளையத்திற்கு நேரில் சென்று விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது ஆறுதலை தெரிவத்தார்.

Advertisment

dmk

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீட்டின் சுவர் பழுதடைந்து இருப்பதை முன்பே அப்பகுதி மக்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. இந்த 17பேர் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

dmk

Advertisment

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் போதாது. பாதிக்கபட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சீரமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.