Skip to main content

தமிழகத்தில் விரைவில் ஒரு புதிய மாற்றம் வரும் அது தே.மு.தி.க ஆட்சிக்கு வருவதுதான்: விஜயகாந்த் பேச்சு!

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
தமிழகத்தில் விரைவில் ஒரு புதிய மாற்றம் வரும் அது தே.மு.தி.க ஆட்சிக்கு வருவதுதான்: விஜயகாந்த் பேச்சு!



தமிழகத்தில் விரைவில் ஒரு புதிய மாற்றம் வரும் அந்த மாற்றம் தே.மு.தி.க ஆட்சிக்கு வருவதுதான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தே.மு.தி.க ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த விஜயகாந்த் பின் பேசியதாவது,

திமுக, அதிமுகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழகத்தில் விரைவில் ஒரு புதிய மாற்றம் வரும் அந்த மாற்றம் தே.மு.தி.க ஆட்சிக்கு வருவதுதான். மக்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் அதனை வாங்காதீர்கள் என்றார்.



பின்னர் பிரேமலதா பேசுகையில்,

படைகளுடன் திருமலைநாயக்கராக விஜயகாந்த் அமர்ந்துள்ளார். ஆட்சியில் இல்லாமலே இத்தகைய செலவு செய்வது பிரம்மாண்டப்படுத்துவது கேப்டனுக்கு மட்டுமே. ஆட்சிக்கு வந்தவுடன் செய்வதை விட இப்போது செய்கிறோம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை நாம் உருவாக்குவோம். தமிழகத்தில் உள்ள மக்களை நேசிக்கும் ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே.

லஞ்ச ஊழல் அற்றவர் விஜயகாந்த். அத்தனை எதிர்கட்சிகளும் மலைப்பாக பார்க்கின்றனர். தண்ணீர் தன் நிலையை மாற்றிக்கொள்ளாதது என்பது போல் விஜயகாந்த் எப்போதும் தன் நிலையை மாற்ற மாட்டார். தொண்டர்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். தமிழகத்தில் திமுக, அதிமுக என அனைவரின் செயல்பாடுகளும் தமிழகத்தை கேள்விக்குறி ஆகிவிட்டது என்றார்.

- முகில்

சார்ந்த செய்திகள்