/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72183.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் சீனிவாசா நகர்ப் பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) இவர் சிறுவயதில் போலியோவால் கால்கள் செயலிழந்த நிலையில் 12ஆம் வகுப்பு வரை படித்து தற்போது தனியாக குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். குடியாத்தம் பிச்சனூர் பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா(22) இரண்டரை அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளி ஆனவர் பிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார்.
சரவணனுக்கும் கீர்த்தனாவும் திருமணம் செய்ய குடும்பத்தார் வரன் தேடிவந்த நிலையில் சரவணனுக்கும் கீர்த்தனாவுக்கும் பெரியோர்களால் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, இன்று குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் உள்ள செல்வபெருமாள் ஆலயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே போலியோவால் கால்களை இழந்த மணமகனுக்கும் இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி பெண்னுக்கும் நடைபெற்ற இந்தத்திருமணத்தில் கலந்து கொண்ட பெரியவர்கள் 'வாழ்க்கையை வாழ்வதற்கு உடல் குறைபாடு தடையில்லை நீண்ட வளமுடன் வாழ' மணமக்களை வாழ்த்தினர். மணமக்களும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது என நெகிழ்ந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)