Skip to main content

சட்டப் பேரவைக்குள் குட்கா: உரிமைக்குழுவின் 2-வது நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவைச் செயலாளர் மனு தாக்கல்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

chennai highcourt

 

சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி, சட்டப் பேரவைச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து,  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி ரத்து செய்து, ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி,  உரிய விளக்கங்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.அதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 24-ல் விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்குழு மற்றும் உரிமைக்குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.இந்த தடையை நீக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டமன்றச் செயலாளர், உரிமைக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி  அமர்வு, இடைக்காலத் தடையை நீக்க மறுத்ததுடன், மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.இந்நிலையில், உரிமைக்குழு நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி, தனி நீதிபதி முன்பாக இருக்கும் வழக்கில் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீஸுக்கு தடை விதித்தது தவறானது என்றும், நோட்டீஸுக்கு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பளித்துள்ள நிலையில், அதில் ஆஜராகாமல் தொடர்ந்த வழக்கில் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

cnc


நோட்டீஸ் மீது தடை விதித்த வழக்கு, நாளை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வரும்போது, பேரவைச் செயலாளர் மனு குறித்தும் முறையிட வாய்ப்புள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மத்திய அமைச்சர் ஆறுதல்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister consoles Armstrong's wife

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது கடந்த 14 ஆம் தேதி (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதே சமயம் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

இதற்கிடையே கடந்த 9 ஆம் தேதி (09.07.2024) பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் மற்றும் அவரது மனைவி பொற்கொடியை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று (17.04.2024) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது ம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரிடம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘கொலை சம்பவம் குறித்த  விசாரணைக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.’ எனத் தெரிவித்தார். 

Next Story

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
New Commissioner of Chennai Corporation takes charge

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நேற்று (16.07.2024) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டிருந்த உத்தரவில், ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சிட்கோ நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராகக் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

New Commissioner of Chennai Corporation takes charge

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலாவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணாவும் நீலகிரி மாவட்ட ஆட்சியராக லஷ்மி பையா தன்னீரும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்காவும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷூம் நியமிக்கப்பட்டனர்.

அதே போன்று அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமியும், கடலூர் மாவட்ட ஆட்சியராக ஆதித்யா செந்தில்குமாரும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனாவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தமிழகம் நேற்று ஒரே நாளில் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். 

New Commissioner of Chennai Corporation takes charge

இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தனது பொறுப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்ட குமரகுருபரனிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.