நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நெல்லை ரயில் நிலையத்தின் பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே பிளாட்பாரங்கள், லக்கேஜ் வைக்கும் இடங்களில் சோதனையானது நடைபெற்றுவருகிறது. அதேபோல் இந்த மிரட்டல் காரணமாக நெல்லையின் பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.