Skip to main content

நிலக்கரி பற்றாக்குறை: மேட்டூரில் 3 யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம்!

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Coal shortage: Power outage at 3 units in Mettur!

 

நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூரில் இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில், 210 மெகாவாட் வீதம் தலா 4 அலகுகளும், 2- வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட ஒரு அலகும் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து நாளொன்றுக்கு 1,440 யூனிட் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 

 

முதல் பிரிவில் 840 மெகாவாட் மின் உற்பத்திக்கு 12 ஆயிரம் டன் நிலக்கரியும், 2- வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு 14 ஆயிரம் டன் நிலக்கரியும் தினமும் தேவைப்படுகிறது. இந்தநிலையில், தற்போது மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சுமார் 7 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால் 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் உள்ள 2, 3, 4 ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. 

 

முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 2- வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் இருந்தும், நிலக்கரி பற்றாக்குறையால் 340 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

 

நிலக்கரி தட்டுப்பாட்டால் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உள்ள அலகுகள் அவ்வப்போது நிறுத்தி, இயக்குவதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்