Skip to main content

இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் - ரஜினி பதில் 

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
rajinikanth about ilaiyaraja notice to coolie title teaser

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பையில் சில தினங்களாக நடைபெற்றது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கூலி என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இளையராஜா இசையில் ரஜினிகாந்த நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா...’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. 

இதையடுத்து கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது கோலிவுட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி தற்போது பதிலளித்துள்ளார். வேட்டையன் பட படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற அவர், படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவரிடம் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அது இளையராஜாவிற்கும் தயாரிப்பாளருக்கும் உண்டானது” என்றார். மேலும், கூலி பட டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ரொம்ப மகிழ்ச்சி என்றும் வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

‘சூப்பர்ஸ்டார் - லோகி சம்பவம் ஸ்டார்ட்’ - வெளியான அறிவிப்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Coolie shooting starts

ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தின் மூலம் ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இணைந்து நடித்து வந்தார். அனிருத் இசையமைக்கும் இப்படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த மாதம் இறுதியில் ரஜினிகாந்த் அந்த படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்வார் என்று தகவல் வெளியானது. 

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். ரஜினி, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ‘கூலி’ படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்ட்டர்களான அன்பரிவ் இந்த படத்திலும் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து, விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன், இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் கூறியதாவது, ‘சூப்பர் ஸ்டார்- லோகி சம்பவம் ஆரம்பம்... கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது’ என அறிவித்துள்ளது. 

Next Story

ரஜினி படத்தில் இணைந்த ‘விக்ரம்’ படப் பிரபலம்; லோகேஷ் வெளியிட்ட அப்டேட்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Vikram' movie cinematographer joined Rajini's coolie film

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பையில் சில தினங்களாக நடைபெற்றது. 

இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ‘கூலி’ படம் மூலம் ரஜினி கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கூலி படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘உங்களை மீண்டும் இப்படத்திற்காக இணைத்ததில் மகிழ்ச்சி‘ என தெரிவித்து கிரிஷ் கங்காதரனை டேக் செய்துள்ளார். மேலும் அவர், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஏற்கெனவே, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘விக்ரம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.