/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/attackni.jpg)
ஜம்மு காஷ்மீரில் விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு வீரர்கள் ஏற்றிக்கொண்டு விமானப்படைக்கு சொந்தமான வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சூரன்கோட் அருகே சென்று கொண்டிருந்த போது, மலைப்பகுதிகளில் தங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று விமானப்படை வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தப்பயங்கரவாத தாக்குதலில், விமானப்படை வீரர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்களை உயர் சிகிச்சைக்காக விமானம் மூலமாக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)