Published on 01/06/2021 | Edited on 01/06/2021

இன்று மாலை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டை துவக்கி வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்திற்கு 4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை வர இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு 4.20 லட்சம் கோவிஷீல்டு வந்துள்ளது. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசியும் தமிழகம் வந்துள்ளது. கொங்கு மண்டலத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படுகிறது. இன்று இரவு இந்த பணிகள் நடைபெறும்'' என தெரிவித்துள்ளார்.