Skip to main content

முத்துராமலிங்க தேவர் குருபூஜை; முதல்வர் பயணம் ரத்து

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

The Chief Minister's trip to attend the Gurupuja of Muthuramalingath Deva was cancelled

 

முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்ல இருந்தார். 

 

நேற்று முதல்வருக்கு ஏற்பட்ட முதுகுவலியின் காரணமாக,  ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில் இன்று மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருந்த விழாவிலும் முதல்வர் பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், “முதலமைச்சருக்கு முதுகுவலி ஏற்பட்டதால் நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, நாளை நடைபெற இருக்கும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் முதல்வர் சார்பாக மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொள்வார்கள்” என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்