A fire in a paint factory; A struggling fire department

Advertisment

சென்னை மணலிபுதுநகரில் பெயிண்ட் தொழிற்சாலை ஒன்றில் பற்றி எரியும் தீயால் அந்தப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 'ரூபி பெயிண்ட்ஸ் கெமிக்கல்' என்கிற நிறுவனத்தின் தயாரிப்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து சம்பவத்தை அறிந்து அந்தப் பகுதிக்கு 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். பெயிண்ட் கெமிக்கல் பொருட்கள் நிரம்பிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வானுயர சூழ்ந்துள்ளது. இது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொழிற்சாலை பகுதியில் தீ எரிந்து வருவது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.