Skip to main content

சென்னை புத்தகச் சங்கமம் - திரைப்பட விழா - 50% தள்ளுபடி விற்பனை

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

 

 
உலகப் புத்தக நாளை (ஏப்ரல்-23) கொண்டாடுவதன் மூலம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த 2013ஆம் ஆண்டு  முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், “சென்னை புத்தகச்  சங்கமம்” எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியை  ஆண்டுதோறும் தொடர்ந்து  நடத்தி வருகிறது.


இந்த ஆண்டு "சென்னை புத்தகச் சங்கமம்" 2019 ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிய  5 நாள்கள் சென்னை - பெரியார் திடலில் (முழுமையாக குளுகுளு (AC) அரங்கில்) நடைபெறுகிறது. 
 
20ஆம் தேதி காலை 11 மணிக்கு  தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் விற்பனை நடைபெறுகிறது. அடுத்த நான்கு   நாட்களும்  காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரையிலும்  புத்தகக் காட்சி நடைபெறும்.

 

ச்


 
அனைத்து நூல்களும் 50% விழுக்காடு தள்ளுபடியில் விற்பனை

விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், விளையாட்டு,பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு  உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த தமிழ்நாட்டின் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்கள் காட்சிப்படுத்தும் அனைத்துப் புத்தகங்களும் 50% தள்ளுபடிவிற்பனையில் கிடைக்கும். லட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் சங்கமிக்கும் புத்தகத் திருவிழாவாக நடைபெறுகிறது.
 

 தொடக்க விழா
இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவை  ஏப்ரல் 20 அன்று காலை 10 மணியளவில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நீதியரசர் து.அரிபரந்தாமன் பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார்.

 

திரைப்பட விழா
திரைப்பட விழாவை கலைமாமணி  அபிராமி இராமநாதன் (தலைவர், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை) துவக்கி வைக்கிறார்.
அய்ந்து நாட்களும் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழகத்தின் அய்ந்து முன்னணி மாற்றுத்திரைப்பட இயக்கங்களான பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, நிழல் திரைப்பட இயக்கம், தமிழ் ஸ்டுடியோ, மறுப்பக்கம் திரைப்பட இயக்கம், காஞ்சனை திரைப்பட இயக்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

 

 திரைப்பட விழாவில் பங்கேற்க*
முன் பதிவுக்கு: 99404 89230, 95240 97177

 

உரை அரங்கம்
முதல் நாளான 20.4.2019 அன்று மாலை 6 மணிக்கு த.க.நடராசன் தலைமையில் திரைப்பட நடிகர் இயக்குநர் பொன்வண்ணன், "என்னைச் செதுக்கிய புத்தகங்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

 

இரண்டாம் நாளான 21.04.2019 அன்று மாலை இளம்படைப்பாளிகள், வாசகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பங்கேற்கும் "இளைஞர்களும் வாசிப்பும்" என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் நடைப்பெறுகிறது. இதில் பதிப்பாளரும் எழுத்தாளருமான கோ.ஒளிவண்ணன் கருத்துரை ஆற்றுகிறார்.

 

மூன்றாம் நாளான 22.04.2019 அன்று மாலை 6 மணிக்கு வீ.குமரேசன் தலைமையில் கவிஞர் நெல்லை ஜெயந்தா  'வாசிப்பைச் சுவாசிப்போம்' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

 

நான்காம் நாளான 23.04.2019 அன்று மாலை 6 மணிக்கு உலகப் புத்தக நாள் விழா கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் புத்தகங்களைப் பாதுகாத்து பரப்பும் பெருமக்களான முனைவர் பா.பெருமாள், தூத்துக்குடி பொன்.மாரியப்பன் ஆகியோருக்கு 'புத்தகர் விருது' வழங்கப்படுகிறது.

 

திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விருதுகளை வழங்கி பாராட்டுரை ஆற்றுகிறார்.

இந்நிகழ்வில் இலக்கிய சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்  "அறிவியக்க புலமைக்கொண்ட செந்தமிழ்நாடே!" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

 

24.04.2019 அன்று மாலை நிறைவு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 'படைப்பூக்கம் தரும் புத்தகவாசிப்பு' என்னும் தலைப்பில்  திரைக்கலைஞர் ரோகிணி உரையாற்றுகிறார்.

 

MGM DIZZEE WORLD
சென்னைப் புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சியில் பங்கேற்கும் அனைவருக்கும்  அளிக்கப்படும் இலவச நுழைவுச் சீட்டினைக் கொண்டு வந்தால் MGM DIZZEE WORLD பொழுதுபோக்குப் பூங்காவில் ரூ.250/- தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும் நாள்தோறும் இரவு 9 மணி அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் மூவருக்கு  எம்ஜிஎம்க்கான இலவச கூப்பன் வழங்கப்படும்.

 

குழந்தைகள் திருவிழா
குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பயிற்சிகள், தவறின்றித் தமிழ் எழுதும் பயிற்சி, கலை பொருட்களை உருவாக்கும் செய்முறை பயிற்சி, ஒளிப்படக் கலையின் அடிப்படைக் கூறுகள், ஓவியப் பயிற்சி  மற்றும் ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட திறனாக்கப் பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளன.


மேலும் ஒவ்வொரு நாளும் வினாடி-வினா போட்டி போன்றவை நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்காவிற்கான இலவச கூப்பன்களும் வழங்கப்பட உள்ளன.

 

போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் உண்டு. வெற்றி பெறும் குழந்தைகளுக்கு குடும்பத்துடன் இலவசமாக எம்ஜிஎம் செல்வதற்கான கூப்பன்களும் வழங்கப்படும்.

குழந்தைகள் திருவிழாவில் பங்கேற்க*
முன் பதிவுக்கு: 95001 30417, 99404 89230

 

வட்டார உணவு
மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

 

புத்தகக்காட்சி வளாகம்
பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் தாராளமாகக் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 
வளாகத்தில் நாள்முழுவதும் பணம் கிடைக்கும் வகையில் ஐஓபி வங்கியின் நடமாடும் ஏடிஎம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளன.

 

நாள்தோறும் பரிசுகள்
அய்ந்து நாள்களும் இரவு 9 மணி அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக எஸ்.எம்.சில்க்ஸ் வழங்கும் பட்டுப் புடவை மற்றும் 4 எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு இலவச கூப்பன்கள். இரண்டாம் பரிசாக ஒரு SMART MOBILE PHONE மற்றும் 2 எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு இலவச கூப்பன்கள்.
மூன்றாம் பரிசாக ‘பெரியார் பிஞ்சு’ குழந்தைகளுக்கான பயனுள்ள மாத இதழ் சந்தா மற்றும் ஒரு எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு இலவச கூப்பன்.
உள்ளிட்ட சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

 அனுமதி இலவசம்....* 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் வாசிப்பு நிகழ்வு (படங்கள்)

Published on 12/01/2024 | Edited on 12/01/2024

 

 

 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் ஜனவரி 12 காலை 10.30 மணிக்கு புத்தகக் காட்சி அமைந்துள்ள வளாகத்தில் 4000 பள்ளி / கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், சென்னை மாநகர மேயர் இரா. பிரியா, திரைக்கலைஞர் ரோஹிணி, பத்திரிகையாளர் நக்கீரன் ஆசிரியர், சுஜித் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story

சென்னை புத்தகக் காட்சி இன்று நடைபெறாது!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Chennai Buddh Show will not be held today

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் காட்சியானது ஜனவரி 21 ஆம் தேதி (21.01.2024) வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை புத்தகக் காட்சி இன்று ஒருநாள் மட்டும் (08.01.2024) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பாதிப்பு காரணமாக புத்தக அரங்குகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் புத்தகக் காட்சி இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், நாளை முதல் (09.01.2024) புத்தகக் காட்சி வழக்கம் போல் செயல்படும் எனவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.