Skip to main content

'வேண்டுமென்றே நிராகரிக்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

'Deliberately reject' - Edappadi Palanisamy Review!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், மீண்டும் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மறுபுறம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளைக் கட்சிகள் தொடங்கியுள்ளது.

 

குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. திமுக ஆட்சி மீது எதிர்க்கட்சி துணைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

 

''அதிமுக ஆட்சியின்போது சட்டஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அப்படியில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. வேலூர் மாநகராட்சியில் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்