
தமிழகத்தில் நவம்பர் 6-,ஆம்தேதி முதல் வேல் யாத்திரை நடைபெறும் என தமிழக பா.ஜ.க தலைமை அறிவித்தது.யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதேபோல் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தலைமையில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது பா.ஜ.க தரப்பிலிருந்து அவசர வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க பொதுச் செயலாளர் நாகராஜன்தாக்கல் செய்த மனுவை, இன்று மாலை அவசர வழக்காக விசாரிக்க இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த அவசர மனுவை நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)