osaka tamil international award winners list

Advertisment

தமிழ்த்திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் மற்றும் தமிழ்ப் படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும் விதமாக ஜப்பானில் ஓசாகா தமிழ் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில்சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 ஆகிய இரு படங்களும் 8 விருதுகள் வென்றுள்ளன.

சிறந்த தமிழ் திரைப்படம் - விக்ரம்

சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (விக்ரம்)

சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (சாணிக் காயிதம்)

சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (விக்ரம்)

சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன்-1)

சிறந்த இயக்குநர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன்-1)

சிறந்த திரைக்கதை - ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் (விக்ரம்)

சிறந்த புரொடக்ஷன் ஹவுஸ் - மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்‌ஷன்ஸ் (பொன்னியின் செல்வன்-1)

சிறந்த நடன அமைப்பு - ஜானி மாஸ்டர் (அரபிக் குத்து - பீஸ்ட்)

சிறந்த துணை நடிகர் - ஃபகத் பாசில் (விக்ரம்)

சிறந்த துணை நடிகை - ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன்-1)

சிறந்த பொழுதுபோக்காளர் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த வில்லன் - விஜய் சேதுபதி (விக்ரம்)

சிறந்த படத்தொகுப்பு - ஃபிலோமின் ராஜ் (விக்ரம்)

சிறந்த சண்டை அமைப்பு - அன்பறிவ் (விக்ரம்)

சிறந்த கலை அமைப்பு - தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் -1)

சிறந்த விஎஃபெக்ஸ் குழு - என்.ஒய் விஎஃபெட்க்ஸ் வாலா (பொன்னியின் செல்வன் -1)

சிறந்த ஒலி வடிவமைப்பு - ஆனந்த் சிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் -1)

சிறப்பு விருது - லவ் டுடே