incident in pudukottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அதனை வீடியோ புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி வந்த நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை, சிறுமியின் உறவினரான முருகன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோ, புகைப்படங்களாக எடுத்து வைத்து சிறுமியிடமும்,சிறுமியின் தாயாரிடமும்காட்டி மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் முருகனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதனை அடுத்து போலீசார் காவலில் எடுத்து தற்போது முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏம்பல் கிராமத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வறண்ட குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.