chennai central to alappuzha expresstrain incident 

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு கடந்த 25 ஆம் தேதி இரவு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த இளைஞர் ரயிலில் புகைப் பிடித்தபடியும், சத்தமாகப் பாட்டு படியபடியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

Advertisment

இதனால் அதிருப்தி அடைந்த ரயில் பயணிகள் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் இது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள் பதிலுக்குப் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பயணிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பெண் பயணி ஒருவரிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்று விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இதனையடுத்து பெண் பயணியைத்தரக்குறைவாகப் பேசி, இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் இது தொடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் அசோக் குமார் (வயது 20) என்ற இருவரைக் கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாகத்தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுடலைராஜ் மற்றும் கரண் என மேலும் 2 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.