வேலூரில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் என்ற இடத்தில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற ஆட்டோ மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து நடந்தது. விபத்தில் அப்பளம் போல் நொருங்கிய ஆட்டோவில் பயணம் செய்த வள்ளி (26), கீர்தனா(4), கவுதம்(7) ஆகியோர் பலியாகினர். வாணியம்பாடி தாலுக்கா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
-ராஜா