தமிழகம் முழுக்க அரசு விழாக்கள், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது என அதிமுக அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை வேகம் பெற்றுள்ளார்கள். சென்ற வாரத்தில் மட்டும் கர்பிணி பெண்களுக்கு சீர்வரிசை கொடுப்பது அடுத்து பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது, தொடர்ந்து பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்குவது என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை அதிமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும்நடத்திவருகிறார்கள்.

Advertisment

 Local election announcement in two days? AIADMK MLAs Information!

இதன் தொடர்ச்சியாக நேற்றுஈரோட்டில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பகுதி வட்ட வார்டு கழக நிர்வாகிகள் என ஏராளமானபேர் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் எம்எல்ஏக்களிடம் உறுதியாக இந்தமுறை உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுமா என கேட்டனர். அதற்கு எம்எல்ஏக்கள் இந்த முறை உறுதியாக அறிவிக்கப்படும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வந்தாலும் வரலாம் நீங்களெல்லாம் பூத் கமிட்டி கூட்டத்தை உடனே நடத்த தயாராக இருங்கள் எனக்கூறினார்கள்.

அதற்கு கருங்கல்பாளையம் பகுதி கழக ர.ர. ஒருவர் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எங்களுக்கு முறையான அலவன்ஸ் வருங்களா தலைவரே என கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசிடம் கேட்க "ஏப்பா அலவன்ஸ் தானே அதெல்லாம் வீடு தேடி வரும் " என உற்சாகப்படுத்தினார்.