Skip to main content

பொதுகுழுவை கூட்டும் டிடிவி தினகரன்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
பொதுகுழுவை கூட்டும் டிடிவி தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் உதவியுடன் இந்த மாதம் பொதுகுழுவை கூட்டும் முயற்சியில் டிடிவி தினகரன் இறங்கியுள்ளார். இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயரை பெறுவதில் எடப்பாடி அணி, டிடிவி தினகரன் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்து தேர்தல் ஆணையத்தில் சின்னம், கட்சி பெயரை பெறுவதற்காக அபிடவிட்டுகள் மற்றும் பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி தரப்பு சமர்ப்பித்துவிட்டனர். இந்நிலையில் மாஜி எம்எல்ஏக்கள் அடுத்தகட்டமாக மாவட்டம் தோறும் தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகளை சந்திக்க இருக்கின்றனர்.

மேலும், இரட்டை இலை சின்னம் உரிமை கோரிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் 15 நாட்கள் அவகாசம் கேட்ட டிடிவி தினகரன் தரப்பினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால் நேற்று முன்தினம் தங்கள் அணி சார்பில் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அவசரம் அவசமாக சமர்ப்பித்தனர். 

இந்நிலையில், வரும் 6 ம் தேதி இரட்டை இலை குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. எனவே தினகரன் தன்னுடைய ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் உதவியுடன் பொது குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து இந்த வாரத்திற்குள் அறிவிப்பார் என்றும் அவ்வாறு பொது குழு கூட்டப்படும் பட்சத்தில் எடப்பாடிக்கு  எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சசிகலா ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்