Skip to main content

3 மாடி அடுக்குமாடி இடிந்து 4 உயிர் பலிக்கு காரணம் மின்சாரதுறை அதிகாரியின் அலட்சிய போக்கு!

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
3 மாடி அடுக்குமாடி இடிந்து 4 உயிர் பலிக்கு காரணம் 
மின்சாரதுறை அதிகாரியின் அலட்சிய போக்கு!

3 மாடி கட்டிடம் இடிந்து விழுவதற்கு இந்த வீடு காரணமே இல்லை. இந்த வீடு இருந்த இடத்திற்கு அருகே 1500 சதுர அடிக்கு ஒரு காலி மனையிருந்திருக்கிறது. இதை மின்சார துறையில் பொறியாளராக பணியாற்றி ராமலிங்கம் என்பவர் தான் ஓய்வு பெற்ற பின்பு சில மாதங்களுக்கு முன்பு பல இலட்சங்களுக்கு வாங்கியிருக்கிறார். 

வாங்கியவர் இந்த இடத்தை காலிமனையாகவே வைத்திருந்திருக்கிறார். கடந்த வார அம்மாவசைக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த 3 அடுக்கு மாடி சுற்றில் ஒட்டியிருந்த சுற்றை தட்டி விட்டு இவருக்கு அத்து என்று அந்த சுற்றை சுரண்டியிருக்கிறார். அப்போது அந்த பகுதி மக்கள் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அங்கே இருந்த காங்கீரிட் மண் எல்லாத்தையும் சுரண்டியதால் வெறும் செம்மண்ணாக மட்டுமே கீழ் மட்டத்திலிருந்து 1 மாடி வரைக்கு இருந்திருக்கிறது. 

அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் இந்த மண்ணை சுரண்டி விட்டு நான் பூசி கொடுக்கிறேன் என்று சொல்லவும் கட்டிட உரிமையாளர் கண்ணப்பனும் சரி என சமாதனம் ஆகியிருக்கிறார். 

சுவரை சுரண்டிய ஓய்வு பெற்ற மின் அதிகாரி ராமலிங்கம் மீண்டும் பூசாமல் கடந்த அம்மாவாசை அன்று பூமி பூஜையை கோலகலமாக நடத்தியிருக்கிறார். இவர் அதிகாரியாக இருந்து வந்தவர் என்பதால் யார் சொல்வதையும் காதில் வாங்கி கொள்ளாமல் பூமி பூஜை முடிந்தம் அப்படியே விட்டு விட்டார். அதன் பிறகு தினமும் மாலை பெய்து வரும் மழையில் கொஞ்சம் கொஞ்சாமாக மண் சுவர் கரைந்து கொண்டேயிருக்கிறது. இதற்கு ஏற்றார் போல் நேற்று பெய்த பேய் மழை 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்தால் தான் அந்த செம்மண் சுவர் கரைந்தது சுவர் நொடிந்து 3 மாடி அப்படியே விழுந்து 4 பேரை பலி எடுத்திருக்கிறது. 

- ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்