Skip to main content

கள்ள ஓட்டு போட்டு பேட்டி கொடுத்த நடிகர்... ராஜேஸ்வரி ப்ரியா கடும் தாக்கு

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

பாமகவில் இருந்து விலகி ''அனைத்து மக்கள் அரசியல் கட்சி''யை தொடங்கிய ராஜேஸ்வரி ப்ரியா நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். 
 

சென்னையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலத்தில் வியாழக்கிழமை மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், 


 

Rajeswari Priya




தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன். தென்சென்னையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்ரீகாந்த்தும், அவரது மனைவியும் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இல்லாமலேயே ஓட்டு போட்டுள்ளனர். இதனை அவர் பேட்டியிலேயே தெரிவித்திருக்கிறார். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லை. இருந்தாலும் அங்குள்ளவர்களிடம் நோ அப்ஜெக்சன் வாங்கிக்கொண்டுதான் ஓட்டு போட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

 

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் ஓட்டு போட முடியாது. தேர்தல் நடைமுறையில் இதுபோன்ற விதிமுறை இல்லை. எந்த அடிப்படையில் அவர்கள் ஓட்டு போட்டார்கள். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும். கள்ள ஓட்டு போட்டுவிட்டு பேட்டியும் கொடுத்திருக்கிறார் அந்த நடிகர். இதைப் பற்றி தெரியாமலேயே பேட்டி கொடுத்திருக்கிறார். 
 

இருந்தாலும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு அதிகாரிக்கு ஒரு அதிகாரம் எதுவரைக்கும் இருக்கிறது. அவர்களது அதிகாரம் ஆள் பார்த்து இருக்கிறதா. பிரபலமாக இருந்தால் விட்டுவிடலாம் என்று இருக்கிறதா. அதிகாரிகளின் அத்து மீறல்தான் இது. எத்தனை இடங்களில் இதுபோன்று அதிகார அத்து மீறல்களை அதிகாரிகள் செய்தார்கள் என்பது தெரியவர வேண்டும். ஆதாரத்தோடு கள்ள ஓட்டு போட்டது தெரிந்தது என்றால் அந்த தேர்தலே செல்லாது என்பதுதான் உண்மை. ஆனால் இவர்கள் என்ன சொல்லுகிறார்கள், நடவடிக்கை எடுத்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

 

இன்னும் 10 நாளில் தேர்தல் முடிவு வந்த பிறகு அதை மறந்துவிட்டு அடுத்த விசயத்திற்கு போய்க்கொண்டிருப்போம். அதுபோல இந்த முறை நடக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் மனு அளித்திருக்கிறோம். திங்கள்கிழமை வழக்கு தொடரப்போகிறேன். வெளிப்படையாக பேட்டி கொடுத்தன் அடிப்படையில் இந்த தேர்தல் எப்படி செல்லும். அப்படியென்றால் நூற்றுக்கணக்கானோர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று திரும்பிச் சென்றுள்ளனர். அவர்கள் ஓட்டுப்போட வழி என்ன. ஸ்ரீகாந்த்தை ஓட்டுப்போட அனுமதித்தைப்போல அவர்களையும் அனுமதித்திருக்க வேண்டுமல்லவா? 
 

நடந்து முடிந்த தேர்தல்களில் பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. தேர்தலுக்கு முதல் நாள் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது, அதற்கான புகார் இருக்கிறது, நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னேன். அந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னேன். எந்தக் கட்சியாக இருந்தாலும் தகுதி நீக்கம் செய்யுங்கள் என்று சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான நடவடிக்கை எடுக்காதவரைக்கும் நான் விடப்போவதில்லை. வழக்கு தொடருவோம். அந்த வழக்கு எப்படி வந்தாலும், அடுத்தடுத்து போராட்டங்களை சந்திக்க தயாராக இருக்கிறேன். 

 

தேர்தல் ஒழுங்காக நடந்தால் நல்ல அரசு வரும். நல்ல அரசு வந்தால்தான் நல்ல ஆட்சி வரும். மக்கள் நன்றாக இருக்க முடியும். தேர்தலை நடத்தக்கூடிய தேர்தல் ஆணையமே சில இடங்களில் அவர்களை அறியாமலேயே கவனக்குறைவாக இருக்கிறார்கள். ஏன் அவர்கள் ஆளும் கட்சிக்கு, மத்திய அரசுக்கு அடிபணிகிறார்களா என்று தெரியவில்லை. இது எதுவாக இருந்தாலும் நான் போராட தயாராகிவிட்டேன். என்னுடைய போராட்டம் ஓயாது. நடிகர் சிவகார்த்திகேயனும் இப்படித்தான் ஓட்டு போட்டுள்ளார் என்று கேள்விப்பட்டேன். அதற்கான ஆதாரங்களையும் திரட்டுவோம். இவ்வாறு கூறினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்