Skip to main content

எடப்பாடிக்கு இத்தனை எதிரிகளா?

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளும் இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கள நிலவரம் எப்படி இருக்கு என்று எடப்பாடி கட்சி நிர்வாகிகள் மற்றும் உளவுத்துறையிடம் விசாரித்துள்ளார்.கள நிலவரத்தை விசாரித்த இபிஎஸ் ஆடிப் போய் உள்ளாராம். இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் முதல் நோக்கமாக உள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றத்தை கொண்டு  வர வேண்டும் என்ற முனைப்பில் திமுக, மற்றும் தினகரனின் அமமுக கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் கள நிலவரத்தை அறிய உளவுத்துறையிடம் எடப்பாடி பழனிச்சாமி விசாரித்துள்ளார்.

 

eps



அப்போது எதிர்கட்சிகளை விட  அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதால் தேர்தல் வேலைகளை யாரும் செய்வதில்லை என்று கூறியுள்ளனர் இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தாலும் இன்னும் அவர்களுக்குள் ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் கட்சி மாறும் மனநிலையில் இருப்பதாகவும் அதனால் தேர்தல் பணியில் எந்த ஈடுபாடும் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. 

 

 

eps



இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி  நான்கு தொகுதிகளிலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.அந்த நிர்வாகிகள் கொடுக்கப்பட்ட வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதை கவனிக்க ஒரு சில தனக்கு நெருக்கமான அமைச்சர்களை நியமித்துள்ளாராம். மேலும் இதனை பயன்படுத்தி அதிர்ப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஒரு சில வேலைகளை தினகரன் கட்சியினர் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.நிலைமை இப்படி இருக்க அதிமுக கட்சியினரே உள்ளடி வேலைகளை செய்து வருவது எடப்பாடிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.