Skip to main content

மோடி விருந்துக்கு முன்பே இ.பி.எஸ்.க்கு அதிர்ச்சி விருந்து கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

 

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அதிமுக கட்சி கலகலக்க தொடங்கிவிட்டது.
 

வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் இந்தியா முழுக்க பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுக அரசு நீடிக்குமா என்பது நடைபெற்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் முடிவில்தான் உள்ளது. இதில் அதிமுகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பேசத்தொடங்கிவிட்டனர். 


  edappadi palanisamy



இந்த நிலையில்தான் உள்கட்சி பிரச்சனை ஈரோடு மாவட்டத்தில் பூதாகரமாக ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கும் பவானி தொகுதி எம்எல்ஏவும் சுற்றுச்சூழல் அமைச்சருமான கருப்பனனுக்கும் கோஷ்டி யுத்தம் நீடித்து வந்தது. நடந்த தேர்தலில் அமைச்சர் கருப்பணன் பெருந்துறை தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக வேலை செய்தார் என்று பட்டியல் போட்டு அதிமுக தலைமைக்கு புகார் கடிதம் கொடுத்து இருந்தார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. 

 

இந்த பின்னணியில்தான் இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்த தோப்பு வெங்கடாசலம் தனக்குள்ள கட்சி பொறுப்பான ஜெ பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தொடர்ந்து கட்சியில் இருந்தும் விலகப் போவதாகவும் கூறி எடப்பாடி பழனிச்சாமி இடம் கடிதம் கொடுத்திருக்கிறார். 

 

thoppu venkatachalam




எடப்பாடி பழனிச்சாமி தோப்பு வெங்கடாசலத்தை சமாதானப்படுத்தி பேசியிருக்கிறார். ஆனால் தோப்பு வெங்கடாசலம் எதற்கும் பிடி கொடுக்காமல் நான் விலகுவது விலகுவதுதான் எனக் கூறியிருக்கிறார். பிறகு எதுவும் கூறாமல் வெளியே சென்றுவிட்டார். இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலத்தை தொடர்ந்து அதிமுகவில் பல எம்எல்ஏக்கள் வெளியே வர முடிவு செய்துள்ளதாக கொங்கு மண்டல அதிமுக வட்டாரம் கூறுகிறது. மொடக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. சிவசுப்பிரமணியம் தோப்பு வுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.  அவரும் கட்சியிலிருந்து வெளிவருவார் எனக் கூறுகிறார்கள். அதேபோல் கொங்கு மண்டலத்தில் உள்ள 5 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகுவார் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சில இடங்களில் வெற்றி பெற்றாலும் இப்போது உள்ள எம்எல்ஏக்கள் விலகுவது இந்த ஆட்சியை பலவீனப்படுத்தியுள்ளது.
 

 முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பிரதமர் மோடி கொடுக்கிற விருந்தில் கலந்துகொள்ள டெல்லி செல்வதற்கு முன்பே அவரது கட்சி  எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.