/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-8_23.jpg)
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்சிக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து அடுத்து என்ன படிக்கலாம். மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும் படிப்புகள் எவை, உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித்தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான வழிகாட்டுதல்களைத்தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படிக்கலாம், வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-9_24.jpg)
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலர் லதா அனைவரையும் வரவேற்றார்.மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், நந்தனார்ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன்,குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன், ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, பள்ளித்துணை ஆய்வாளர் வாழ்முனி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி,அருள்சங்கு,நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின்பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன், சுவாமி சகஜானந்தா மணி மண்டபஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளின் மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர். இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார்.சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)