Skip to main content

கிராமங்களின் வளர்ச்சி இன்றி நாடு முன்னேற்றம் காணாது - வெங்கய்யா நாயுடு

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
கிராமங்களின் வளர்ச்சி இன்றி நாடு முன்னேற்றம் காணாது - 
வெங்கய்யா நாயுடு

கிராமங்களின் வளர்ச்சி இன்றி நாடு முன்னேற்றம் காணாது என்றும் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். அரசின் சுஜலாம் சுஃபலாம் திட்டத்தின் கீழ் குஜராத்தில் நீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசுகையில்,

மோடி அரசு நதிகளை இணைக்கும் திட்டத்தை மேற்கொள்வதையும் அவர் புகழ்ந்தார். நாடு முழுவதும் மின்சாரம், தண்ணீர் மற்றும் கல்வி ஆகியவற்றை வழங்குவதன் மூலம் தன்னாட்சி என்பதிலிருந்து நல்லாட்சி என்பதனை நோக்கிச் செல்ல பணியாற்றுகிறது என்று குறிப்பிட்டார் வெங்கய்யா நாயுடு.

சமீபத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட நர்மதா அணையிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு அனுப்பப்படும் தண்ணீரை மெக்சானா, காந்திநகர் மாவட்டங்களில் விநியோகம் செய்ய அமைக்கப்படும் ரூ 1,243 கோடி மதிப்பலான ஆறு நீர்க்குழாய்களுக்கான அடிக்கல்லை நாயுடு இட்டார். இவற்றிலிருந்து பெறப்படும் நீரானது 245 ஏரிகள், தடுப்பணைகளுடன் இணைக்கப்படும். மேலும் 55,640 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் செய்யவும் பயன்படும். என இவ்வாறு தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்